கொம்புதூக்கி அம்மன் கோயில் குண்டம்

அந்தியூர், மார்ச் 13: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கரும்பாறை வனப்பகுதியில் கொம்புதூக்கிஅம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத இறுதியில் குண்டம் திருவிழா வனத்துறை அனுமதியுடன் நடக்கும். அதன்படி,  இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.

நேற்று கோயில் வளாகத்தில் பகர்தர்கள் பொங்கல் வைத்தும், சாமி தரிசனம் செய்து அம்மை அழைத்தல்  மற்றும் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, 40 அடி நீளத்திற்கு கோயில் வளாகத்தில் தயார் செய்யப்பட்டது. பின் குண்டத்திற்கு பூசாரிகள் சிறப்பு பூஜைகள் செய்து குண்டம் இறங்கி தொடங்கி வைத்தனர்.அதன்பின், பக்தர்கள் வரிசையில் வந்து, கையில் பூ சுற்றிய பிரம்பை ஏந்தி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாவிளக்கு பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைந்தது.

 விழாவிற்கு அந்தியூர், நகலூர், பெருமாபாளையம், கீழ்வானி, மூங்கில்பட்டி, அத்தாணி, அண்ணமார்பாளையம், ஈசப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு கொம்புதூக்கி அம்மன் சாமியை தரிசனம் சென்றனர்.அந்தியூர் வனத்துறை மற்றும் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. போக்குவரத்துதுறை சார்பில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து வசதியும் செய்யப்பட்டது.

Related Stories: