தாளவாடி மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்த புள்ளி மான்

 

சத்தியமங்கலம், மே 5: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.  தாளவாடி மலைப்பகுதியில் உள்ள வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு புள்ளிமான் குடிநீர் தேடி அங்கும் இங்கும் அலைந்தபோது வழி தவறி அருளவாடி கிராமத்திற்குள் நுழைந்தது.

கிராமத்திற்குள் புள்ளிமான் நடமாடுவதை கண்ட தெரு நாய்கள் புள்ளி மானை துரத்த தொடங்கின. அப்போது அப்பகுதி பொதுமக்கள் புள்ளி மானை பாதுகாப்பாக பிடித்து கட்டி வைத்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு சென்று அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

The post தாளவாடி மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்த புள்ளி மான் appeared first on Dinakaran.

Related Stories: