லத்தேரி அருகே நம்சந்தை விவசாயிகளுடன் கலெக்டர் சந்திப்பு

கே.வி.குப்பம், மார்ச் 13: கே.வி.குப்பம் தாலுகாவுக்கு உட்பட்ட லத்தேரி அடுத்த காளாம்பட்டு கிராம அருவி தோட்டத்தில் நேற்று முன்தினம் நம் சந்தை விவசாயிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் சந்தித்து பேசினார்.அப்போது, விவசாயிகள் கூறும் போது, இயற்கை விவசாயத்தால் நஞ்சு இல்லாத காய்கறிகள், பழங்கள், நாட்டு மாட்டு பால், சிறுதானியங்கள் மற்றும் நாட்டுக்கோழி முட்டை, தேன், போன்ற பொருட்கள் உருவாக்கப்படும். பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளை கைவிட்டவர்களும், பொறியியல் பட்டதாரிகளும் கூட இந்த இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இங்கு விற்பனைக்கு கொண்டு வருவது இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட பொருட்கள்தானா என்பதை உறுதி செய்து, அதற்கான விலையை நிர்ணயம் செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு கூட புற்றுநோய் வருகிறது. இயற்கைக்கு முரணான உணவு பழக்கங்களே அதற்கு காரணம். இயற்கை விவசாய பொருட்களை சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். எனவே நாமும், நமது தலைமுறையினரும் ஆரோக்கியமாக வாழ இயற்கை விவசாய பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என கூறினர்.‘நம்சந்தை’ விவாசயிகளின் கோரிக்கையான வேலூர் மாவட்டத்தில் உள்ளஉழவர் சந்தைகளில் நம் சந்தைக்கு ஒரு இடத்தை தருவதாக கலெக்டர் தெரிவித்தார்.

Related Stories: