தண்டு மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ராசிபுரம், மார்ச் 12:  ராசிபுரம் அருகே, தண்டு மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ராசிபுரம் அருகே பட்டணம் பகுதியில், தண்டுமாரியம்மன் கோயிலில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று  பூச்சாட்டுதலுடன் மாசித்திருவிழா தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அலங்கரித்த அம்மன் சிலையை தேரில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து  தேரை இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற தேர், மீண்டும் கோயிலை வந்தடைந்தது. தேரோட்டத்தை காண சென்னை, நாமக்கல், சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை ராசிபுரம் போலீசார் மேற்கொண்டனர்.

Related Stories: