ஹோலி பண்டிகை கோலாகலம்+

கோவை, மார்ச் 11:  கோவையில் உள்ள வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஹோலி பண்டிகையை நேற்று கொண்டாடினர்.வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக வடமாநில மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.இந்நாளில் வாழ்வில் வண்ணங்கள் சேரும் வகையில் ஒருவர் மீது ஒருவர் வண்ண கலவை பொடிகளை வீசியும், பூக்களை வீசுவதும் வழக்கம். ேகாவை மாவட்டத்தில் கடந்த காலங்களை விட தற்போது வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோவையில் வசித்து வரும் வடமாநில மக்கள் ஹோலி பண்டிகையை நேற்று உற்சாகமாக கொண்டாடி மகிழந்தனர். ஆர்.எஸ்.புரம், சுக்கிரவார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களின் உறவினர்களின் மீது வண்ண பொடிகளை தூவியும், பாடல்களுக்கு நடனமாடியும், இனிப்புகள் வழங்கியும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Related Stories: