பைக் ஆசாமிகள் கைவரிசை பால் உற்பத்தியாளர் சங்கம் திறப்பு கலெக்டர் வருகைக்காக 3 மணி நேரம் காத்திருப்பு

பாடாலூர், மார்ச் 10: ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி கிராமத்தில் புதிதாக திறக்கப்பட இருந்த மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க திறப்பு விழாவிற்கு 3 மணி நேரத்திற்கு மேலாகியும் கலெக்டர் வராததால் அலுவலர்களும், பொதுமக்களும் காத்து கிடந்தனர்.உலக மகளிர் தின விழா மார்ச் 8ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி கிராமத்தில் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறப்பு விழாவும், மகளிர் தின விழாவும் கொண்டாடப் படுவதாக அறிவிக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு புதிய மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறக்கப் படும் என அறிவிக்கப் பட்டு அரசு அலுவலர்களும், பொதுமக்களும் பெண்களும் விழா நடைபெறும் இடத்தில் காலை 9 மணிக்கு வந்து விட்டனர்.

விழா 10 மணிக்கு நடைபெறும் என காத்திருந்த அவர்களுக்கு கலெக்டர் வராததால் ஒரு மணி வரை காத்திருந்தனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் கலெக்டர் வராததால் பொதுமக்களும், பெண்களும் ஏமாற்றமடைந்தனர். பின்னர் ஒருவழியாக மகளிர் பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தை கால்நடைத் துறை அலுவலர்களே திறந்து வைத்து விட்டு சென்றனர். மகளிர் தினத்தை முன்னிட்டுமகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு விழாவிற்கு பெண் கலெக்டர் வருவார் என பார்க்க ஆவலுடன் காத்திருந்த பெண்கள் ஏமாற்றம் அடைந்ததுடன் கலெக்டர் வரவில்லை என புலம்பியபடியே கலைந்து சென்றனர்.

Related Stories: