அதிமுக ஆலோசனை கூட்டம்

பொன்னமராவதி,மார்ச் 6: பொன்னமராவதி பேரூராட்சி தேர்தல் அதிமுக ஆலோசனைக்கூட்டம். நடந்தது. கூட்டத்திற்கு பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் பழனியாண்டி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்னமராவதி பேரூராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை எவ்வாறு வெற்றி பெற செய்வது வெற்றிக்கான தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் நகர அவைத்தலைவர் சின்னையா, வேந்தன்பட்டி ஊராட்சி செயலாளர் பழனியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: