வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தாழ்வான நிலையில் சாக்கடை வடிகாலில் கொசுக்கள் உற்பத்தி

கரூர், மார்ச் 6: கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேஸ்வரா நகர்ப்பகுதிகளில் தாழ்வாக உள்ள சாக்கடை வடிகால்களை மேம்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை அருகே வெங்கடேஸ்வரா நகர்ப்பகுதிகள் உள்ளன. நான்குக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ள இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் குடியிருப்போர்களின் நிலைக்கு ஏற்ப தேவையான அளவு சாக்கடை வடிகால் வசதி இல்லாமல் உள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வடிகால்கள் அனைத்தும் ஆழம் குறைந்த நிலையில் உள்ளது.

எனவே இதனை சீரமைத்து அதிக ஆழத்துடன் சாக்கடை வடிகால்கள் கொண்டு வரப்பட வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். வடிகால்கள் தாழ்வாக உள்ளதால் சாக்கடை கழிவுகள் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தி போன்ற பல்வேறு தொந்தரவுகளை பகுதியினர் அனுபவித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சாக்கடை வடிகால்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: