பாவை பொறியியல் கல்லூரியில் கலாச்சார கலைவிழா

ராசிபுரம், மார்ச் 6:  ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் பொறியியல் கல்லூரி மாணவர்களின் பன்முகத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக அஸ்திரா-20 என்ற கலாச்சார கலைவிழா இருநாட்கள் நடைபெற்றது. விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர்  நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர்  மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி வைத்தார். இயக்குநர் மாணவர் நலன் மற்றும் அஸ்ட்ரா கலை விழாவின் ஒருங்கிணைப்பாளர்  அவந்தி நடராஜன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகர் கௌதம் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அஸ்ட்ரா-20 ல் முதல் பரிசு பெற்ற பாவை விஜாட்ஸ் மற்றும் இரண்டாம் பரிசு வாரியர்ஸ் உள்ளிட்டோருக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. விழாவில் கல்வி நிறுவனங்களின் செயலாளர் பழனிவேல், இயக்குநர் ராமசாமி, நடுவர்கள், பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கலைவிழா  துணை ஒருங்கிணைப்பாளர்  மோகன் நன்றி கூறினார்.

Related Stories: