விவசாயிகளுக்கு விதைகள், இடுபொருட்கள் விநியோகம்

 

நாமக்கல், மே 25: நாமக்கல் வட்டார விவசாயிகளுக்கு கோடை பயிர் சாகுபடிக்கான விதைகள் மற்றும் இடுபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் வட்டாரத்தில் தற்போது பரவலாக மழை பெய்துள்ளதால், விவசாயிகள் கோடை காலத்தில் தண்ணீர் தேவை குறைவாக உள்ள பயிர்களான சோளம், உளுந்து, எள், நிலக்கடலை போன்ற பயிர்களை பயிரிட்டு, குறைந்த காலத்தில் வருமானம் பெறலாம்.

இதற்காக, கோடை பயிர் சாகுபடித் திட்டம் 590 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு தேவையான விதைகள், விதை கிராமத்திட்டத்தின் கீழ், மானிய விலையில் நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு தேவையான உயிர் உரங்கள். நுண்ணூட்ட உரங்கள், உயிர் பூஞ்சான கொல்லிகளும் மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள், உடனடியாக ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்று பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விவசாயிகளுக்கு விதைகள், இடுபொருட்கள் விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: