டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம்

 

நாமக்கல், மே 26: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்படும் ‘டென்சிங் நார்கே’ தேசிய விருது பெற வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில், நிலம்-கடல்-வான்வெளியில் வீர, தீர சாகசம் புரிபவர்களுக்காக 2023ம் ஆண்டிற்கான ‘டென்சிங் நார்கே’ தேசிய சாகச விருது வழங்கப்படுகிறது.

சாகசப் பந்தயங்களில் உள்ளோரின் சாதனைகளைப் புதுப்பிக்கவும், சகிப்புத்தன்மை, குழுவாக இணைந்து திறமையாக செயல்படுபவர்களுக்கும் மற்றும் சாகசத்தை வெளிப்படுத்தும் இளைஞர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்துவதற்கும், சாகசத் துறையில் ‘வாழ்நாள் சாதனையாளர்’ என்ற விருதும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விருதிற்கான விண்ணப்பங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையவழி மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, கலெக்டர் பரிந்துரையுடன் கூடிய ஒப்பம் பெற்று, வரும் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

The post டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: