நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

 

நாமக்கல், மே 26: நாமக்கல் கிழக்கு மாவட்டதிமுக செயற்குழு கூட்டம் நாளை(27ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் 27ம் தேதி(நாளை) காலை 10 மணிக்கு நடக்கிறது. நாமக்கல் முல்லை நகரில் உள்ள கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில், இனமான பேராசிரியர் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார்.

வனத்துறை அமைச்சர் டாக்டர். மதிவேந்தன், நாமக்கல் ராமலிங்கம் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர் பொன்னுசாமி எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இக்கூட்டத்தில், ஜூன் 3ம் தேதி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா வை கொண்டாடுவது குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் முகவர்கள் பணி குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

எனவே, கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர், சிறப்பு அழைப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு ராஜஸே்குமார் எம்.பி., தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: