கோவை, மார்ச் 6: கோவையில் திமுக இளைஞரணி சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை நடந்தது. இளைஞர் அணி அமைப்பாளர் தளபதி இளங்கோ தலைமை தாங்கினார். மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். இதில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, அயர்ன் பாக்ஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம், மருத்துவ உதவி என 2,067 பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.