கீழாம்பூர் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

கடையம், மார்ச் 6:  கடையம் அருகே கீழாம்பூர் கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் பள்ளியில் “தூய்மை இந்தியா பசுமை இந்தியா” திட்டத்தின் ஒரு பகுதியாக  பூமியின் தட்பவெப்ப மாற்றத்தை ஒழுங்கு செய்யும் விதமாக மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.    விழாவில் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர்  செந்தில்வேல் மற்றும் ஆஷா ஆகியோர் பங்கேற்று மரம் நடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்தனர். மேலும் இனி வரும் காலங்களில் தேவையான மழை பெய்திட நாம் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்து அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும் என்றார்.  நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாகி ராபர்ட்,  தாளாளர் ஆனி மெட்டில்டா  நமது சுற்றுப்புறத்த பாதுகாக்கும் பொருட்டு அதிகளவில் மரக்கன்றுகளை நடுவதை நாம் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றனர். பள்ளியின் முதல்வர் அமலா ஜூலியன் விழாவில் பங்கேற்ற மாணவர்களை பாராட்டினார்.

Related Stories: