ஆர்ஜி குமார் இல்ல மணவிழா

மன்னார்குடி, மார்ச் 4:மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்ஜி குமார் இல்ல மணவிழா தஞ்சையில் நாளை நடைபெறுகிறது.  இவ்விழாவில், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அஇஅதிமுக தலைவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசுகின்றனர்.மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்ஜி குமார்-ஹேமலதா ஆகி யோரின் மகனும் ஆர்ஜிகே குழுமங்களின் நிர்வாக இயக்குனர் மிதுன்குமார், தஞ்சாவூர் சுப்பையன்-ராஜேஸ்வரி ஆகியோரின் மகள் லக்சியா ஆகியோரின் திருமண விழா நாளை (மார்ச் 5) காலை 10 மணிக்கு தஞ்சை மஹாராஜா மஹாலில் நடைபெறுகிறது.இவ்விழாவில், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அஇஅதிமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசுகின்றனர். மண விழாவிற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: