ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு விளம்பரம்: பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் முடிவு

முத்துப்பேட்டை, மே 26: அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு விளம்பரம் செய்வது என்று எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் தலைவர் சண்முகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. தலைமையாசிரியர் அமுதராசு, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நாகராஜன், கௌரவ தலைவர் வீரையன், திமுக முன்னோடி துரையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நல்லாசிரியர் மணி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தங்கதுரை, முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் தட்சிணாமூர்த்தி, பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2024 – 25ம் கல்வி ஆண்டிற்கான தமிழக அரசின் சலுகைகளை பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்ப்பது, அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களை நூறு சதவிதம் தேர்ச்சி அடைய பாடுபடுவது, பழுதடைந்த பள்ளி கட்டிடம் மற்றும் சத்துணவு கூடங்களை அப்புறப்படுத்துவது, 10, 11, 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளி திறப்பு அன்று பாராட்டுவது , பொதுமக்கள் பார்வைக்கு டிஜிட்டல் பேனர் வைத்து மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்துவது, மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்து மாணவர்களை அதிக அளவில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவில் உதவி தலைமை ஆசிரியர் இந்திரா நன்றி கூறினார்.

The post ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு விளம்பரம்: பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: