முத்துப்பேட்டை அடுத்த பேட்டையில் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி

முத்துப்பேட்டை, மே 23: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பேட்டை கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற புனித செபஸ்தியார் ஆலயத்தின் 17ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 20ம் தேதி அணைக்காடு பங்கு தந்தை மரியஜோசப் ஜெரால்டு அடிகளார் தலைமையில் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தேர் பவனி வரும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு மிக சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பட்டுக்கோட்டை பங்குத்தந்தை ஜோசப் செல்வராஜ் அடிகளார் பாடல் திருப்பலியை தொடர்ந்து பலவண்ண வாணவேடிக்கைகளுடன் பேட்டை செபஸ்தியார் ஆலயத்திலிருந்து தேர் ஊர்வலம் புறப்பட்டது.

இதில் தெற்குத் தெரு, பேட்டை சாலை, பெரிய கடைத்தெரு, பங்களா வாசல், பழைய பஸ் ஸ்டாண்ட், மன்னார்குடி சாலை பகுதியில் சென்று விட்டு மீண்டும் அதே பகுதி வழியாக பேட்டை சென்று பல முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்ற பின்னர் தேர் ஊர்வலம் நள்ளிரவு செபஸ்தியார் ஆலயம் வந்தடைந்தது. வழியெங்கும் பல்வேறு மதத்தினர் வரவேற்று வழிபாடு நடத்தினர். இதில் புனித செபஸ்தியார் ஆலயத்தின் நிர்வாகிகள், கிராம மக்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், இந்த நிலையில் தேர் திருவிழாவின் இறுதி நாளான நேற்று மாலை புனிதக் கொடி இறக்கும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

The post முத்துப்பேட்டை அடுத்த பேட்டையில் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி appeared first on Dinakaran.

Related Stories: