அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பட்டமளிப்பு விழா

தஞ்சை, மார்ச் 4: தஞ்சை மற்றும் திருவையாறு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கான பட்டமளிப்பு விழா தஞ்சை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடந்தது. உதவி பயிற்சி அலுவலர் வின்சென்ட்ராஜ் வரவேற்றார். துணை இயக்குனர் சீராளன் தலைமை வகித்தார். தஞ்சை டிஜஜி லோகநாதன் முதன்மை விருந்தினராக பங்கேற்று பயிற்சியாளர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசும்போது, பயிற்சியாளர்கள் ஒழுக்கத்துடன், தன்னம்பிக்கை, விடா முயற்சியுடன் செயல்பட்டால் சாதனையாளர்கள் ஆகலாம் என்றார். விழாவில் 300 பயிற்சியாளர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.தஞ்சை ஐடிஐ நிலைய மேலாண்மைக்குழு தலைவரும் திருமயம் பெல் நிறுவன கூடுதல் பொது மேலாளருமான ஆண்ட்ரூ, தஞ்சை ஜெயம் இன்டஸ்ட்ரீஸ் மேனேஜிங் பார்ட்னர் ராஜமகேஸ்வரி, தஞ்சை ரோட்டரி கிளப் தலைவர் ஆனந்த், அடையாறு ஆனந்தபவன் மேலாளர் வினோத், திருவையாறு ஐடிஐ நிலைய முதல்வர் பாண்டித்துரை, தஞ்சை மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பயிற்றுநர் உத்திராபதி நன்றி கூறினார்.

Related Stories: