தஞ்சாவூர் அருகே மாட்டுச்சந்தை: 500 மாடுகள் விற்பனை

 

வல்லம், மே4: தஞ்சாவூர் அருகே 8.கரம்பை பைபாஸ் பகுதியில் தேவையான அனைத்து வசதிகளுடன் தனியார் இடத்தில் மாட்டுச்சந்தை வெள்ளிக்கிழமை தோறும் நடந்து வருகிறது. இந்த மாட்டுச்சந்தையில் நாட்டு மாடுகள், கறவை மாடுகள், உழவுப்பணிக்கான மாடுகள் என பிற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து விற்றும், புதிய மாடுகளை வாங்கியும் செல்கின்றனர். சராசரியாக வாரத்திற்கு ஒருமுறை இந்த மாட்டுச்சந்தையில் 400 முதல் 500 மாடுகள் வரை விற்பனையாகிறது.

இதுகுறித்து 8.கரம்பை பகுதியை சேர்ந்த விவசாயி விஜயகுமார் கூறியதாவது: தற்போது இங்கு வாரந்தோறும் மாட்டுச் சந்தை நடந்து வருகிறது. இதனால் தஞ்சை பகுதியில் மாடுகள் வளர்ப்பவர்கள், விவசாயிகள் தங்கள் மாட்டை விற்பனைக்கு கொண்டு வருவது எளிதான ஒன்றாக உள்ளது. மேலும் புதிய மாடுகளையும் வாங்கி செல்கின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் சாகுபடி பணிகள் நடக்காத போது வெகுவாக வருமானத்திற்கு கை கொடுப்பது கால்நடைகள்தான். எனவே இந்த மாட்டுச்சந்தை எங்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் ஒன்றாக உள்ளது என்றார்.

The post தஞ்சாவூர் அருகே மாட்டுச்சந்தை: 500 மாடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: