தமிழக ஆசிரியர்கள் 1200 பேர் திருவனந்தபுரத்திற்கு களப்பயணம்

நாகர்கோவில், மார்ச் 4:  ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் தமிழக ஆசிரியர்கள் 1200 பேர் திருவனந்தபுரத்திற்கு களப்பயணமாக அழைத்து செல்லப்பட இருக்கின்றனர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் 2019-20ம் கல்வியாண்டில் ‘குவாலிட்டி கம்போனென்ட்ஸ் -செகண்டரி அன்ட் சீனியர் செகண்டரி’ என்ற தலைப்பில் அரசு பள்ளிகளில் இடைநிலை, மேல்நிலை பயிற்றுவிக்கும் அறிவியல் மற்றும் கணித பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் களப்பயணம் மேற்கொள்ளும் வகையில் ‘டீச்சர் எக்சேஞ்ச் புரோகிராம்’ என்ற செயல்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கல்வி மாவட்டத்திற்கு 10 ஆசிரியர்கள் வீதம் 120 மாவட்டங்களில் இருந்தும் மொத்தம் 1200 ஆசிரியர்களுக்கு மொத்தம் ரூ.24 லட்சம் நிதி அனுமதிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு கல்வி மாவட்டத்திற்கு 6 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 4 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என்று 10 ஆசிரியர்கள் வீதம் 120 கல்வி மாவட்டங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 200 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாசிரியர்கள் நேரடி களப்பயணம் மேற்கொள்ளத்தக்க தேசிய விண்வெளி ஆய்வு மையம், அருங்காட்சியகங்கள் மற்றும் பயிற்சி அரங்கம் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய கேரள மாநிலம், திருவனந்தபுரம் அழைத்து செல்லப்பட உள்ளனர். இந்த களப்பயணத்தின்போது விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த சிறப்பு வகுப்புகளும் வல்லுநர்களால் நடத்தப்பட உள்ளது. இந்த செயல்பாடு மத்திய அரசு நிறுவனமான ஐஆர்சிடிசி உடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.  இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்தனர்.

Related Stories: