காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

காரைக்குடி, மார்ச் 3: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி முதல்வர் தேனிலா வரவேற்றார். பள்ளி குழும தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் சாந்திகுமரேசன், கல்விகுழும துணை தலைவர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி ஆரோ எஜிகேசன்சர்வீஸ் சிஇஓ டாக்டர் மாலதி பேசுகையில், ‘பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன்னிலையில் எப்போதும் சிரிந்த முகத்துடன், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நல்ல சூழலே நல்ல மனநிலையை தரும். துரித மற்றும் ஓட்டல் உணவுகளை தவிர்க்க வேண்டும். 10 வயது குழந்தைகளிடம் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். செல்போன் கதிர்வீச்சு குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்’ என்றார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.

Related Stories: