நீடாமங்கலம், மார்ச் 2: நீடாமங்கலம் செயின்ட் ஜீட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 36வது ஆண்டுவிழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜன், துணைத் தலைவர் ராஜகோபால் ஆகியோர் தலைமையில் நடந்தது. பள்ளியின் தாளாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். பள்ளியின் செயலாளர் அநிரூபிதா அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் மேலாளர் விக்னேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பள்ளி முதல்வர் செல்வம் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக தஞ்சாவூர் லயன்ஸ் சங்க பிரோம் மற்றும் பட்டி மன்ற பேச்சாளர் கவிஞர் கங்கை மணிமாறன், பள்ளியின் மூத்த முதல்வர் சுகுணவதி கலந்து கொண்டனார்.