மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல் நாகை மாவட்டத்தில் தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்

நாகை,மார்ச்2: தமிழ் செம்மல் விருது பெற நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரவீன்பிநாயர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சிக்காக அமைப்பு வைத்து அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்தம் தமிழ் தொண்டினை பெருமைபடுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் செம்ம்மல் என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு தொகையும் தகுதியுரையும் வழங்கப்படும்.

நடப்பு ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு நாகை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் அமைப்பு வைத்து பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருதுக்குரிய விண்ணப்ப படிவம் தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்க்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் செய்வோர் தன்விவர குறிப்புடன் இரண்டு போட்டோ மற்றும் அவர்கள் ஆற்றிய தமிழ் பணி ஆகிய விவரங்களுடன் நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்த்தில் வரும் 10ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

Related Stories: