குஜிலியம்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த காளை மீட்பு

குஜிலியம்பாறை, மார்ச் 2: குஜிலியம்பாறை அருகே விவசாய தோட்டத்தில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த காளை மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். கரூர் மாவட்டம் அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(42). விவசாயியான இவருக்கு சொந்தமாக இதே ஊரில் விவசாய தோட்டம் உள்ளது. இங்கு சுமார் 100 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது. தோட்டத்தில் தான் வளர்த்து வந்த காளை மாட்டை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை இந்த கிணற்றில் காளை மாடு தவறி விழுந்தது. இதை கண்ட ஆறுமுகம், இது குறித்து குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

குஜிலியம்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் மருதை தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி கிணற்றில் கீழே இறங்கினர். பின்னர் காளை மாட்டினை கயிற்றை கட்டி மேலே தூக்கி உயிருடன் மீட்டனர்.

Related Stories: