குடியுரிமை சட்டத்தை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தர்ணா போராட்டம்

அறந்தாங்கி, பிப்.28: அறந்தாங்கியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்வீரர்கள் கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை 8 இடங்களில் தர்ணா போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் செயல்வீரர்கள் கூட்டம் அறந்தாங்கி மர்க்கஸில் மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முகம்மது மீரான், மாவட்ட பொருளாளர் முஹம்மதுபாரூக், துணை செயலாளர் ஹாரீஸ், பீர்முகம்மது, துணை தலைவர் குலாம்பாட்சா, மாணவரணி அன்சாரி, மருத்துவ அணி கிளர் முகம்மது மற்றும் கிளை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாளை (29ம் தேதி) புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, காசிம்புதுப்பேட்டை, புதுக்கோட்டை, முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், கோட்டைபட்டினம், மீமிசல், கிருஷ்ணாஜிபட்டினம் ஆகிய இடங்களில் தர்ணா போராட்டம் நடத்துவது என்றும், இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: