மத்திய குடிமை பணிகளுக்கான நேர்முக தேர்வுக்கு இலவச பயிற்சி

கோவை, பிப். 26:  கோவை அம்மா ஐஏஎஸ் அகாடமி நிறுவனரும், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கை:ஐஏஎஸ் முதன்மை தேர்வில் வெற்றிபெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு நேர்முக தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க அம்மா ஐஏஎஸ் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது. மத்திய தேர்வாணையம் குடிமை பணிகளுக்காக நடத்தும் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில், முதன்மை தேர்வில் தகுதிபெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு அம்மா ஐஏஎஸ் அகாடமி பயிற்சி மையத்தின் சார்பில் சென்னை மற்றும் கோவையில் மூத்த குடிமைப்பணி அதிகாரிகள் ஆளுமை தேர்வு மற்றும் ஒருநாள் சிறப்பு வகுப்பு நடத்தப்பட உள்ளது. மாதிரி ஆளுமை தேர்வு பற்றிய மேலும் விபரங்களை இப்பயிற்சி மைய இணையதளத்தில் www.ammaiasascademy.com என்ற இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 0422-2472222, 87606-74444 (வாட்ஸ்அப்) என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Advertising
Advertising

Related Stories: