மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுடன் துவக்கம்

ஈரோடு, பிப். 26:  ஈரோடு மாநகர் நக்கீரர் வீதியில் புது எல்லை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்தி விநாயகர், பாலமுருகன் ஆகிய சன்னதிகள் உள்ளன. இந்த கோயில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (26ம் தேதி) காலை 9 மணிக்கு கோயில் கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். மார்ச் மாதம் 5ம் தேதி இரவு 8 மணிக்கு மலர் பல்லக்கில் அம்மனின் வீதி உலாவும் நடைபெற உள்ளது. 6ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம், பால் குடம் எடுத்து கோயிலுக்கு ஊர்வலம் வருதலும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. 7ம் தேதி இரவு 8 மணிக்கு அம்மனுக்கு காய்கனி அலங்காரம் செய்யப்பட்டு, 8ம் தேதி இரவு 9 மணிக்கு வாய்க்காலில் கும்பம் விடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

Related Stories: