ஜெயலலிதா பிறந்த நாள் விழா திருச்செந்தூர் ஜிஹெச்சில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் வழங்கினார்

திருச்செந்தூர், பிப். 26: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி திருச்செந்தூர் ஜிஹெச்சில் பிறந்த 3 குழந்தைகளுக்கு யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் தங்க மோதிரம் பரிசு வழங்கினார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் தங்கமோதிரம் அணிவித்தார். கடந்த 23ம்தேதி பிறந்த குழந்தைகளுக்கு பணமுடிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு டாக்டர்கள் கோமதிநாயகம், சுமதி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பட்டினம் கணேசன், திருச்செந்தூர் நகர அதிமுக செயலாளர் மகேந்திரன், சுதர்சன்வடமலைபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் நடுவூர் செல்வன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: