புதூர் அரசு பள்ளியில் மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள்

விளாத்திகுளம், டிச. 19: புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 162 மாணவ- மாணவியருக்கு அரசின் இலவச சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார். புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 பயிலும் 60 மாணவர்கள், 102 மாணவியர் என மொத்தம் 162 பேருக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ, இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். இதில் பள்ளி தலைமையாசிரியர்(பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, திமுக ஒன்றிய செயலாளர்கள் புதூர் (கிழக்கு) செல்வராஜ், (மத்திய) ராதாகிருஷ்ணன், (மேற்கு) மும்மூர்த்தி, விளாத்திகுளம் (மேற்கு) அன்புராஜன், (மத்திய) ராமசுப்பு, (கிழக்கு) சின்னமாரிமுத்து, (தெற்கு) இமானுவேல், புதூர் பேரூராட்சி தலைவர் வனிதா, வார்டு கவுன்சிலர்கள் வெற்றிவேல், தினகர், தங்கமுத்து, அங்காள ஈஸ்வரி, புதூர் மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் பொன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அழகுராஜ், பேரூர் முன்னாள் செயலாளர் பாலகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூர் தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், புதூர் ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் வாசுதேவன், விவசாய அணி மோகன்தாஸ், கிளை செயலாளர் செல்லப்பாண்டி, இளைஞரணி சதீஷ்குமார், கார்த்திக்ராஜா, மகளிரணி ராசாத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: