காடுவெட்டி ஊராட்சி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

முத்துப்பேட்டை, பிப்.26: முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர் பாலகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் இளம்பரிதி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாணவர்களின் கல்வி தரம் பற்றி பெற்றோர்கள்-ஆசிரியர்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றது. ஒருங்கிணைந்த கல்வி திட்ட மான்யத்தில் பள்ளி கட்டிடத்திற்கு வண்ணம் தீட்டியது, கழிவறைகள் பராமரிப்பு செய்தது தொடர்பாக வரவு செலவு விவாதிக்கப்பட்டது.

மார்ச் 24ம் தேதி ஆண்டுவிழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. பள்ளி நடைமுறை, மாணவர்கள் கல்வித்தரம் பற்றி தலைமை ஆசிரியர் முருகேசன் விளக்கி பேசினார். இதில் ஆசிரியர்கள் அருளானந்தம், உமாராணி, பிரபாகரன், கலைச்செல்வி ஆகியோர் மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சுகாதாரம் பற்றி எடுத்துரைத்தனர். முன்னதாக ஆசிரியர் துரைராசு வரவேற்றார். ஆசிரியை அன்புச்செல்வி நன்றி கூறினார்.

Related Stories: