திருத்துறைப்பூண்டி அருகே முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தெப்பத் திருவிழா

திருத்துறைப்பூண்டி, மே 7: திருத்துறைப்பூண்டி அருகே முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதில் தெப்பம் மின்னொளியில் ஜொலித்தது. திருத்துறைப்பூண்டி அருகே கொக்காலடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நாள்தோறும் இரவு அம்பாள் வீதியுலா காட்சியும், அபிஷேக ஆராதனையும், கடந்த 3ம் தேதி வெள்ளிக்கிழமை தீ மிதி திருவிழா நடைபெற்றதுமுன்னதாக பெண்கள் சாமிக்கு சீர்வரிசை எடுத்து வந்து சாமி அலங்காரம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் இரவு கோயிலை சுற்றி அம்மன் புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து கோயில் அருகே உள்ள குளத்தில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி அருள் பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு தெப்ப உற்சவ விழா நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

The post திருத்துறைப்பூண்டி அருகே முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தெப்பத் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: