பலாத்காரத்தால் கர்ப்பம் மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி பெண்ணின் கருவை கலைக்க அனுமதி சிசுவின் டிஎன்ஏவை பாதுகாக்க உத்தரவு

மதுரை, பிப். 21: பலாத்காரத்தால் கர்ப்பமான மாற்றுத்திறனாளி பெண்ணின் கருவை கலைக்க அனுமதித்த ஐகோர்ட் கிளை, சிசுவின் டிஎன்ஏவை பாதுகாக்க வேண்டுமென கூறியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனக்கு 17 வயதில் மனநலம் பாதித்த, மாற்றுத்திறனாளியான மகள் உள்ளார். நான் கூலி வேலைக்கு வெளியில் சென்ற நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தற்போது என் மகள் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  இதுகுறித்து கடம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தையை பெற்று வளர்க்கும் மனநிலை என் மகளுக்கு கிடையாது. எனவே, கருவை கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். அவர்களால் எங்கள் குடும்பத்திற்கு ஆபத்து நேரலாம். எனவே, என் மகள் வயிற்றில் வளரும் கலைக்கவும், தேவையான சிகிச்சை அளிக்கவும், எங்கள் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த மனு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 24 வார கருவை கலைக்கலாம் என டீன் பரிந்துரைத்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கருவை கலைக்க அனுமதித்த நீதிபதி, சிசுவின் டிஎன்ஏவை பாதுகாத்து வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: