இனி மாநில எல்லையில் மட்டும் பறக்கும் படை வாகன சோதனை: வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்க கோரிக்கை ஏற்பு

 

மதுரை, ஏப். 21: தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணமின்றி பணம் எடுத்து செல்வதாகக் கூறி பணம், பொருட்களை பறிமுதல் செய்து கருவூலத்தில் செலுத்தியதால் தொழில் வணிகம் குறிப்பாக குறு,சிறு, நடுத்தரத் தொழில் வணிகர்களும், விவசாயிகளும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஏப்ரல் 19ம் நாள் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த உடன் தமிழகத்திற்குள் வாகன சோதனை நிறுத்தபக்பட வேண்டும்.

ஜூன் மாதம் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை நீட்டிக்கக் கூடாது என்றும், தோக்தல் நடைபெறாத மாநில எல்லைகளில் மட்டும் வாகன சோதனை தொடரலாம் என்றும் வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம் சார்பாக தலைமை தேர்தல் ஆணையரிடமும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகளிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இக்கோரிக்கையை ஏற்று, “தேர்தல் முடிந்து விட்டதால் பறக்கும் படை மாற்றபடும் என்றும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா தேர்தல்கள் முடியும் வரை எல்லையில் மட்டும் பறக்கும் படை செயல்படும்” என்றும் அறிவித்துள்ளார்.

 

The post இனி மாநில எல்லையில் மட்டும் பறக்கும் படை வாகன சோதனை: வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்க கோரிக்கை ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: