அரசுக்கு ரூ.2 கோடி இழப்பு வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை, பிப். 21: வாகனங்கள் பதிவு செய்வது தொடர்பாக அரசுக்கு ரூ.2 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக வட்டார போக்குவரத்து அலுவலர், 2 ஆய்வாளர்கள், 4 புரோக்கர்கள் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 11ம் தேதி, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். 13 இருக்கைகளுக்கு மேல் 36 இருக்கைகளுக்குள் உள்ள வாகனத்தை ஆம்னி பேருந்தாக பதிவு செய்யாமல் மேக்ஸி ேகப் வாகனமாக பதிவு செய்திருந்தது, காலாண்டு வரிக்குப்பதில் ஆயுட்கால வரியாக தொகையை குறைத்து போட்டிருப்பது போன்ற பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. இந்த முறைகேடுகள் மூலம் ரூ.2 கோடியே 9 லட்சத்து, 4 ஆயிரத்து 586 அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.இதனையடுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பூர்ணலதா, முருகன், புரோக்கர்கள் நாராயணன், மனோஜ், சம்பத்குமார், செந்தில்குமார் ஆகிய 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: