கோவை அருகே மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள்

கோவை, பிப்.21: கோவை அருகே மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை, ராமநாதபுரம் ஒலம்பஸ் அடுத்த நாகப்பா தேவர் வீதியை சேர்ந்தவர் தண்டபானி(53). இவரது மனைவி லட்சுமி (48). இவர்களுக்கு மகள்கள் உள்ளனர். லட்சுமி கட்டிட வேலை பார்த்து வந்தார். தண்டபானி எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது.

Advertising
Advertising

கடந்த 31.08.2016 அன்று மீண்டும் கணவன், மனைவிக்குள் சண்டை வந்தது. அப்போது ஆத்திரமடைந்த தண்டபானி வீட்டில் இருந்த மண் எண்ணெய்யை எடுத்து லட்சுமி மீது ஊற்றி தீ வைத்மதார். இதில் லட்சுமி தீயில் கருகி உயிரிழந்தார். இது குறித்து கோவை, ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டபானியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு கோவை மாவட்ட 4வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது குற்றஞ்சாட்டப்பட்ட தண்டபானிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார்.

Related Stories: