மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஈரோடு, பிப்.21: மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மார்ச் 1ம் தேதி இளைஞர் எழுச்சிநாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சித்தோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணஙக்ள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக செயலாளர் தோப்பு சதாசிவம் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் முத்துசாமி கூறுகையில்,`தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 52 நாட்களுக்கு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்.சித்தோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பேரோடு அரசு ஆரம்பப்பள்ளி, மேட்டுநாசுவம்பாளையம், எலவமலை ஆகிய பகுதிகளிலும் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் கந்தசாமி, மாநில கொள்கைபரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார், நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாவட்ட அவை தலைவர் குமார்முருகேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், சின்னையன், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணி, திண்டல் குமாரசாமி, வில்லரசம்பட்டி முருகேசன், எல்லப்பாளையம் சிவக்குமார், பகுதி செயலாளர் நடராஜன், பேரூர் கழக செயலாளர் முத்துகிருஷ்ணன், லதாபாஸ்கர், சண்முகவடிவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: