அதிமுக வக்கீல் அணி ஆலோசனை கூட்டம்

தேனி. பிப். 20: தேனி மாவட்ட அதிமுக வக்கீல் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனியில் தனியார் ஓட்டலில் நடந்தது.கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட வக்கீல் அணி செயலாளர் டி.கே.ஆர்.கணேசன் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் வக்கீல்கள் வெள்ளைச்சாமி, போடி பாலமுருகன், ஜெயராஜ், தங்கத்துரை, பாலமுரளி, தேனி வேல்முருகன், சந்திரபாண்டி, உத்தமபாளையம் கண்ணன், ஆண்டிபட்டி திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது வருகிற 24ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது

Related Stories: