மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி நாளை இரவு முழுவதும் நடைதிறப்பு

மதுரை, பிப். 20: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாளை(பிப்.21) இரவு முழுவதும் பக்தர்களின் வசதிக்காக நடை திறக்கப்பட்டு இருக்கும். எனவே, விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்து வருகிறது. தை தெப்பத்திருவிழா முடிந்து, தற்போது மாசி திருவிழா நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து மகா சிவராத்திரி உற்சவம் நாளை (21ம்தேதி) நடக்கிறது. அன்றிரவு நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனை பிப். 22ம் தேதி அதிகாலை வரை நடைபெறும்.

மீனாட்சியம்மன், சுவாமி மற்றும் உற்சவர் சன்னதிகளில் விடிய, விடிய அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.

பொதுமக்கள் சேவார்த்திகளும், பக்தர்களும், அபிஷேகப் பொருட்களான பால், தயிர், இளநீர், பன்னீர் பழவகைகள் தேன், மஞ்சள்பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை 21ம் தேதி மாலைக்குள் கோயிலில் உள்ள உள்துறை அலுவலகத்திற்கு வழங்கலாம். பக்தர்கள் கோயிலுக்குள் இரவு முழுவதும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இரவு முழுவதும் தரிசனம் செய்யலாம் என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: