நாமக்கல்லில் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி

நாமக்கல், பிப்.19: நாமக்கல்லில் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி இன்றும் (19ம்தேதி), நாளையும் (20ம்தேதி) கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.ஆண்களுக்கு 100 மீ, 200 மீ, 800 மீ மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், பெண்களுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், கபடி, கைப்பந்து, கால்பந்து போன்ற குழு போட்டிகளும் காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. இதேபோல் இறகுப்பந்து போட்டி இன்று காலை 8.30 மணிக்கு மாவட்ட பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

கூடைப்பந்து போட்டி நாமக்கல் அரசு ஆண்கள் தெற்குபள்ளியிலும், டென்னிஸ் போட்டி ஆபீசர்ஸ் கிளப்பிலும், மேசைப்பந்து போட்டி நாமக்கல் விக்டோரியா ஹாலிலும் நாளை (20ம்தேதி) காலை 8.30 மணிக்கு நடக்கிறது.  அரசின் அனைத்து துறையிலும் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். காவல்துறையில் அமைச்சு பணியாளராக பணிபுரியும் பணியாளர்கள், அரசுப் பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதியில்லை. பணிபுரியும் அரசு பணியாளர்கள், பணிபுரிவதற்கான அடையாள அட்டையை கொண்டு வரவேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: