பழிவாங்கும் போக்கை கைவிடக்கோரி அரசு நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், பிப்.19: கொள்முதல் நிலைய பணியாளர்கள் பழிவாங்கபடும் நடவடிக்கையை கைவிடக்கோரி திருவாரூரில் நேற்று தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆய்வு என்ற பெயரில் பழிவாங்கப்படுவதை கைவிட வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு உரிய கூலியை தினந்தோறும் ரொக்கமாக வழங்க வேண்டும், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்கத்தினர் சார்பில் திருவாரூர் மன்னார்குடி சாலையிலிருந்து வரும் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச மண்டல தலைவர் கருப்பையன், ஐஎன்டியூசி மண்டல தலைவர் அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் குருநாதன், முருகேசன், பாண்டியன், சங்கர நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: