மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகள் விலை கடும் சரிவு

மதுரை, பிப்.17: மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை நேற்று கடுமையாக குறைந்து விற்பனையானது. மொத்த வியாபாரிகள் வாடிக்கையாளர்களை கூவி, கூவி அழைத்து காய்கறிகளை விற்றனர். இதனால் குறைந்த விலையில், அதிகளவில் காய்கறிகளை பெண்கள் உள்ளிட்டோர் வாங்கிச்சென்றனர். கடந்த சில வாரத்திற்கு முன்பு ஒரு கிலோ ரூ.150க்கு விற்ற முருங்கைக்காய், தற்போது

ரூ.30க்கு விற்பனையாகிறது. இதுகுறித்து மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் பி.எஸ்.முருகன் கூறியதாவது:
Advertising
Advertising

‘‘ஒரு கிலோ பீட்ருட் ரூ.10, நூக்கல் ரூ.10, சவ்சவ் ரூ.8, டர்னிப்பூ ரூ.12, வெண்டைக்காய் ரூ.10, கோஸ் ரூ.9, பீன்ஸ் ரூ.20, காரட் ரூ.30, பச்சை மிளகாய் ரூ.20, புடலங்காய் ரூ.10, பெரிய பாகற்காய் ரூ.30, சின்ன பாகற்காய் ரூ.75, முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ.30)

(ஒரு வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.150), சோயா பீன்ஸ் ரூ.75, பட்டர் பீன்ஸ் ரூ.80, பச்சை பட்டாணி ரூ.40,

தக்காளி ரூ.9, கத்தரிக்காய் ரூ.20, பூசணிக்காய் ரூ.10, பெரிய வெங்காயம் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.15, சேனைக்கிழங்கு ரூ.20, கருவேப்பிலை ரூ.50, மல்லி ரூ.15, புதினா ரூ.18, இஞ்சி ரூ.65, கருணைக்கிழங்கு ரூ.30, சுரைக்காய் ரூ.10 என விற்பனையானது. பொதுவாக காய்கறிகள் தேனி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் விளைச்சல் அதிகமாகியுள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் முகூர்த்த தினங்களும் குறைந்துள்ளதால் விலை கணிசமாக குறைந்துள்ளது. விலை குறைவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வாடிக்கையாளர்கள், குறிப்பாக ெபண்கள் மகிழ்ச்சியுடன் குறைந்த விலைக்கு அதிகமாக வாங்கிச் சென்றனர்’’ என்றார்.

Related Stories: