கர்ப்பிணிகளுக்கான ரத்ததான முகாம்

அந்தியூர், பிப்.17: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கான ரத்ததான முகாம் நடந்தது. அந்தியூர், பர்கூர் மலைப்பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் ரத்தம் தேவைப்படும் போது, அரசு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. அவசர தேவைக்கு சில நேரங்களில் ரத்தம் கிடைப்பதில்லை. இதைக்கருத்தில் கொண்டு ரத்ததான முகாம் நேற்று நடந்தது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கவிதா தலைமையில் மருத்துவ பணியாளர்கள் ரத்ததான முகாமை நடத்தினர்.

Advertising
Advertising

இதில், அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். 40க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். முகாமில் பெறப்பட்டதை ரத்தம், ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: