நாகலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி, பிப். 17:     கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த நாகலூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகளை கேட்டறிந்தார். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டது எனவும், நெல் ரகங்கள் எப்படி தரம் பிரிக்கப்படுகிறது எனவும், நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணப்பட்டுவாடா எவ்வாறு செய்யப்படுகிறது எனவும் கேட்டறிந்தார். தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு தேவையான இடவசதி, மின்சார வசதி மற்றும் பாதுகாப்பு வசதி உள்ளதா? எனவும் அலுவலரிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலைய கண்காணிப்பாளர் தனம், பட்டியல் எழுத்தர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக எழுத்தர் சபி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) கோவிந்தராஜ் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Related Stories: