தேர்தல் காலங்களில் ேமாசமான சட்ட வரம்பு மீறல்களை பாஜ அரசு செய்கிறது

வடலூர், ஏப். 20: கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறிஞ்சிப்பாடி ஒன்றியம் புலியூர் காட்டுசாகை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் த.வா.க. தலைவர் வேல்முருகன் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான வெற்றி கூட்டணி புதுச்சேரி உட்பட 40 இடங்களில் மகத்தான வெற்றிபெறும். ஒன்றிய பாசிச பாஜ அரசு கொடுமையான மிக மோசமான சட்ட வரம்பு மீறல்களை செய்து கொண்டிருக்கின்றது. எப்போதும் தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்த பிறகு தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டின்கீழ்தான் இந்திய நாடு முழுவதும் இருக்கின்ற அனைத்து துறைகளும் இயங்கும்.

முதன்முறையாக இந்தியாவில் பாசிச பாஜ அரசு சர்வாதிகார தன்மையோடு அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளை தேர்தல் காலங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்ய தூண்டிவிட்டு குறிப்பாக திருமாவளவன், கடலூர் மேயர் மற்றும் பொறுப்பாளர்கள் வீடுகளை எல்லாம் சோதனையிட்டு உளவியல் ரீதியாக ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி எப்படியாவது வென்றுவிட வேண்டுமென்று நினைக்கின்ற இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மக்கள் மிகச்சிறந்த முடிவை எடுப்பார்கள். திமுக தலைமையிலான இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பண்ருட்டி ஏரிப்பாளையம் தனி பஞ்சாயத்து பிரிப்பதற்கு அரசு முடிவு எடுக்கும் என சட்டமன்றத்தில் உறுதியளித்து இருக்கின்றார். கண்டிப்பாக அது நிறைவேறும், என்றார். மாநில அமைப்பு குழு உறுப்பினர் ஆனந்த், ஒன்றிய தலைவர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

The post தேர்தல் காலங்களில் ேமாசமான சட்ட வரம்பு மீறல்களை பாஜ அரசு செய்கிறது appeared first on Dinakaran.

Related Stories: