பக்தர்கள் வசதிக்காக கிரிவலப் பாதையில் பேவர் பிளாக் கற்கள்

திருப்பரங்குன்றம், பிப். 13: திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் பக்தர்கள் வசதிக்காக பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

திருப்பரங்குன்றத்தில் மாதந்தோறும் பவுர்ணமி நாளன்று திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம் சுமார் நான்கு கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த கிரிவல பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல வசதியாக இருபுறமும் நடை மேடை அமைக்க பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
Advertising
Advertising

பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் சட்டமன்றத்தில் குரல் எழுப்பியதோடு கிரிவல பாதையில் பக்தர்களின் வசதிக்காக பேவர் பிளாக் அமைத்து தரக்கோரியும் சாலையை அகலப்படுத்தி தரக்கோரியும் மேலும் ஆங்காங்கே பக்தர்கள் உட்கார்ந்து செல்ல வசதியாக மாடங்கள் அமைத்து தரக்கோரியும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் பொலிவுறு நகர் திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகளில் கருங்கற்கள் பதிப்பதற்காக ஏற்கனவே இருந்த இருந்த பேவர் பிளாக் கற்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. அந்த அகற்றப்பட்ட பேவர் பிளாக் கற்கள் திருப்பரங்குன்றத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த கற்கள் திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதை முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் இருந்து நிலையூர் பிரிவு வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கிரிவலப்பாதையின் இருபகுதியிலும் தலா மூனறை அடி அகலத்திற்கு பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நேற்று துவங்கியது. இதன்மூலம் கிரிவலப்பாதை 7 அடிக்கு அகலப்படுத்தப்படுகிறது. மேலும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நிறைவு பெற்றவுடன் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: