மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் முகாம்

மதுரை, பிப். 13: மதுரை மாவட்டத்தில் மத்திய அரசு நிறுவனம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் வழங்க மதிப்பீட்டு முகாம்கள் நடத்தப்படுகிறது. பின் ஒரு மாத இடைவெளியில் உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இம்முகாமில், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், பார்வை குறைபாடுடைய கல்வி பயிலும் மாணவர்களுக்கான உபகரணங்கள், 6 வயதிற்குபட்ட மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நகரும் வண்டி, காதொலி கருவி, மனவளர்ச்சி குன்றியோருக்கு சிறப்புக்கல்வி உபகரணங்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள், செயற்கை கால் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் வழங்கப்படும். முகாமில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேசிய அடையாள அட்டை பெற விண்ணப்பம் செய்யாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கலெக்டர் வினய் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘இம்முகாம் வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஒன்றிய பகுதிகளுக்கு கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 19ம் தேதி மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், அதேநாள் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் மதியம் 2 மணிக்கும் நடைபெறுகிறது. வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் 20ம் தேதி காலை 10 மணியளவிலும், அலங்காநல்லூர் ஒன்றியத்தில் மதியம் 2 மணியளவிலும் நடக்கிறது. உசிலம்பட்டி ஒன்றியத்தில் 21ம் தேதி காலை 10 மணிக்கும், அன்று மதியம் 2 மணிக்கு செல்லம்பட்டி ஒன்றியத்திலும், திருமங்கலம் மற்றும் டி.கல்லுப்பட்டி ஒன்றிய பகுதிகளுக்கு வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்திலும், அன்று மதியம் 2 மணிக்கு திருப்பரங்குன்றம் ஒன்றியத்திலும் முகாம் நடைபெறுகிறது.

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம்-1, மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு, அன்று மதியம் 2 மணிக்கு மதுரை வடக்கு மண்டலம்-2 அலுவலகத்திலும், சாத்தமங்கலம் மாநகராட்சி அலுவலகத்திலும். மதுரை கிழக்கு மண்டலம்-3,ல் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கும், அன்று மதியம் 2 மணிக்கு மதுரை ெதற்கு மண்டலம்-4லும், ஹார்விபட்டியில் உள்ள சமுதாயக்கூடத்திலும் நடைபெறுகிறது.

முகாமில் உபகரணங்கள் தேவை, தகுதி மற்றும் வகைப்பாட்டின் அடிப்படையில் வழங்கப்படும். தகுதியானவர்கள் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-6, ஆதார் கார்டு, வாக்காளர் சான்று மற்றும் ரேசன்கார்டு நகலுடன் நேரில் வர வேண்டும். மேலும் இதுதொடர்பாக 0452-2529695 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>