ஆரம்ப சுகாதார மையத்தில் திறந்தவெளி உடற்பயிற்சி மையம் 20ம் தேதி திறப்பு

மூணாறு, பிப்.12: மூணாறு அருகே சித்திராபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் திறந்தவெளி உடற்பயிற்சி மையம் திறக்கப்பட உள்ளது. கேரள சுகாதாரத்துறை சார்பில் இடுக்கி மாவட்டத்தில் முதல் முறையாக சித்திராபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் திறந்தவெளி உடற்பயிற்சி மையம் இந்த மாதம்   துவங்கப்பட உள்ளது. ரூ.2.5 லட்சம் செலவில் கேரள சுகாதார துறை உடற்பயிற்சி மையத்தை நிறுவியுள்ளது. உடல்பயிற்சி மூலமாக பல்வேறு நோய்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்த மையம் திறக்கப்படவுள்ளது. ஏற்கனவே மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் மட்டும் நிறுவப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி உடற்பயிற்சி கூடம் செயல்பட துவங்கும் என்று சுகாதார மேற்பார்வையாளர் பாபு ராஜ் கூறினார். மேலும் மாவட்டத்தில் 7 இடங்களில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: