நிலக்கடலை கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை விற்பனை கூடம் உடனே அமைக்க வேண்டும்

தரங்கம்பாடி,பிப்.12: தரங்கம்பாடி பகுதியில் நிலக்கடலை கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்று நிலக்கடலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் காழியப்பநல்லூர், சிங்கானோடை, ஆணைக்கோவில், பிள்ளைப்பேருமாநல்லூர், காலமநல்லூர், மாமாகுடி, மாணிக்கப்பங்கு, பத்துக்கட்டு, தில்லையாடி, திருக்கடையூர் உள்ளிட்ட பகுதியில் 1400 ஏக்கர் அளவில் சித்திரைபட்டம், ஆடிப்பட்டம், கார்த்திகை பட்டம் ஆகிய 3 காலங்களில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. பயிரிடப்டும் நிலக்கடலைகளை கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை விற்பனைகூடம் அமைக்க வேண்டுமென்று நிலக்கடலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நிலக்கடலை விவசாயி பத்துக்கட்டு பிரபாகரன் கூறியதாவது; நிலக்கடலை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது.

ஏக்கருக்கு 3 மூட்டை விதைக்கடலை தேவைப்படும் 90 நாள் பயிரான நிலக்கடலைக்கு 3 முறை எரு போட வேண்டும். நிலக்கடலை சாகுபடியில் ஏக்கருக்கு 30 இருந்து 40 மூட்டைகள் வரை கிடைக்கும். எடுக்கப்பட்ட நிலக்கடலை விற்பனை செய்ய விவசாயிகள் அவதிப்படுகின்றனர். நிலக்கடலை உரிய காலத்தில் விற்க முடியாமல் போவதால் உரிய லாபம் கிடைக்காமல் போகிறது. நிலக்கடலை விவசாயிகள் நிலக்கடலையை நல்ல விலைக்கு விற்க தரங்கம்பாடி பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும். மேலும் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு அளிக்கப்படுவது போல் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் விதை, உரம், ஜிப்சம் உள்ளிட்டவைகளை மானிய விலையிலும், இலவசமாகவும் வழங்கிட வேண்டும். இதற்கு அரசு உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து நிலக்கடலை விவசாயிகளின் கஷ்டங்களை தீர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார்.

தரங்கம்பாடி விவசாயிகள் கோரிக்கை

நிலக்கடலை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 3 மூட்டை விதைக்கடலை தேவைப்படும் 90 நாள் பயிரான நிலக்கடலைக்கு 3 முறை எரு போட வேண்டும். நிலக்கடலை சாகுபடியில் ஏக்கருக்கு 30 இருந்து 40 மூட்டைகள் வரை கிடைக்கும். எடுக்கப்பட்ட நிலக்கடலை விற்பனை செய்ய விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

யார் மீது பழிபோடுவது

இந்த ஆய்வில், உன்னிடம் மூன்று சாக்லேட்டுகள் உள்ளன உன் சகோதரன் உனக்கு 4 சாக்லேட்டுகள் கொடுக்கிறான். மொத்தம் எத்தனை சாக்லேட்டுகள் போன்ற எளிய வழிமுறை கணக்குகளை கூட 100 சதவீதம் மாணவர்கள் பதில் அளிக்கவில்லை என்பது எதார்த்தம். இந்தப் பழியை யார் மீது போடலாம்? பாடத்திட்டத்தை வடிவமைப்பவர்கள் மீதா? கல்வித்துறை அலுவலர்கள் மீதா? அல்லது வழக்கம்போல் ஆசிரியர்கள் மீது பழி கூறி விட்டு ஒதுங்கி கொள்ளலாமா? என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: