ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக விளையாட்டு போட்டி

கோவை, பிப். 11:  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் கோவை சரவணம்பட்டி பிபிஜி கல்வியியல் கல்லூரியின் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் கலை இலக்கிய போட்டிகள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது. பி.பி.ஜி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமை வகித்தார். தாளாளர் சாந்தி தங்கவேலு முன்னிலை வகித்தார். போட்டியை கோவை மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன் துவக்கி வைத்தார். இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த 18 கல்வியியல் கல்லூரிகள் பங்கேற்று உள்ளது. 100மீ, 400மீ ஓட்டம், தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய தடகளப் போட்டிகள் நடந்தது.  200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக டாக்டர் பாண்டியன், பிபிஜி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் சித்ரா, உடற்கல்வி இயக்குனர் மனோகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர். மேலும், பிபிஜி கல்வியியல் கல்லூரி கலையரங்கில் இன்று கட்டுரை போட்டி மற்றும் இசை போட்டி ஆகிய கலை இலக்கிய போட்டிகள் நடக்கிறது.

Related Stories: