இடைநிலை ஆசிரியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

விருதுநகர், பிப். 7: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதன்மைகல்வி அலுவலகம் முன் இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், அரசு, அரசு உதவி, மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக்க வேண்டும். அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலையாசிரியர்களுக்கு 4 ஆண்டுகளாக வழங்கப்படாத பதவி உயர்வை வழங்க வேண்டும். பொதுத்தேர்வு அறை கண்காணிப்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைளை திரும்ப பெற வேண்டுமென்ற கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலாளர் முருகேசன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வைரமுத்து, பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவா முத்தையா, உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் விஜயபாலன், இடைநிலைப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில இணைச்செயலாளர் ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினர்.

Related Stories: